ரஷ்யாவில் உயிரிழந்த மகனின் உடலை மீட்க தந்தை கோரிக்கை…

9 August 2020, 10:07 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியை சேர்ந்த முகமது ஆசிப் ரஷ்யாவில் படிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியான நிலையில், அவரது தந்தை  அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாராபுரம்கொழிஞ்சிவாடி பகுதியை சேர்ந்த முகமது ரபிக் மற்றும் நெகுறு பானுவின்  மூன்று மகன்கள் முதல் மகன் முகமது ஆசிப்( 20), இரண்டாவது மகன்முகமதுஆதிக் (16) , மூன்றாவது மகன் அபூஹரேர அபாக் (4) முதல் மகன் முகமது ஆசிப்( 20), ரஷ்யாவில்  மடுத்துவம் 5ம் ஆண்டு படித்து வருகிறார். மருத்துவ படிப்பில் அதிகம் ஆர்வம் உள்ளதால் இந்திய மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைக்காத நிலையில் தங்களை விட்டு பிரித்து  ரஷ்யாவில் படிக்கச் சென்றார்.

இன்று மதியம் தன் மகன் இறந்ததை இந்திய தூதரகம் மூலம் தெரிவிக்கப்பட்டது என்றும், நேற்று ஆற்றின் நீரில் மூழ்கி பலியாகினர் என்ற செய்தியை தெரிவித்தனர்  என்றும், பலியானதை தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு உடலை கொண்டுவர வேண்டும் மற்றும் மகன் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை வேண்டுகோள் விடுத்தார். 

Views: - 7

0

0