கட்டப்படாத வீட்டிற்கு மத்திய அரசின் வாழ்த்து கடிதம்: வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் புகைப்படம் அனுப்பினால் விருது

Author: Udayaraman
8 October 2020, 9:09 pm
Quick Share

அரியலூர்; அரியலூரில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்படாத வீட்டிற்கு மத்திய அரசின் வாழ்த்து கடிதம் வந்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சான்குளம் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். மேலும் கணவனை இழந்த அக்கா பக்கத்தில் உள்ள சொந்த இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் இவர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது அஸ்திவாரம் தோன்றுவதற்கு கூட தன்னிடம் பணமில்லாததால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மாணிக்கம் மற்றும் அவரது அக்கா ராணிக்கு பிரதம மந்திரி அலுவலகத்திலிருந்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியதற்கு நன்றி என்றும், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என இருவருக்கும் தனித்தனியாக நன்றி கூறி கடிதம் வந்துள்ளது. இதனை பார்த்த மாணிக்கம் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீடே கட்டாமல் வீடு கட்டியதற்கு நன்றி என கடிதம் வந்துள்ளதால் தங்களது பெயரில் வீடு கட்டியதாக அதிகாரிகள் கணக்கு காட்டி உள்ளார்களோ என சந்தேகம் வந்துள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Views: - 29

0

0