கொரோனா தொற்றால் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கிய சக காவலர்கள்..!!

10 August 2020, 8:00 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றல் உயிரிழந்த இரண்டு காவலர்களுக்கு சக காவலர்கள் நிதி திரட்டி நிவாரண உதவியாக தலா 3 லட்சம் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் ஜெயபிரகாஷ் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையம் சார்பாக அங்கு பணிபுரியும் காவலர்கள் ரூ 3 லட்சம் நிதி திரட்டினார்கள்.

அதே போல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் அய்யனார் கொரோனோ வைரஸ் தாக்கத்தால் கடந்த மாதம் உயிரிழந்தார். இவருடன் பணிபுரிந்த சகா காவலர்கள் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ரூ 3 லட்சம் நிதி திரட்டினார்.

இந்த நிதியை மதுரை தென்மண்டல டிஐஜி ராஜேந்திரன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர்கள் நிதியை பெற்றுக் கொண்டனர்.

Views: - 31

0

0