வரதட்சணை வழக்கில் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது

Author: Udhayakumar Raman
30 November 2021, 4:29 pm
Quick Share

செங்கல்பட்டு: வரதட்சணை வழக்கில் பரிந்துரை செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ண பிரசாத் என்பவர் மீது அவரது மனைவி அர்ச்சனா தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை என புகார் அளித்திருந்தார் . அந்த புகார் மீது விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க மகளிர் காவல் நிலையம் காஞ்சிபுரம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு புகாரை அனுப்பி இருந்தது. அந்த புகாரை விசாரித்து கிருஷ்ண பிரசாத்துக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக தனது அறிக்கையை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க கிருஷ்ணா பிரசாத்திடம் சமூகநலத்துறை அலுவலகத்தில் தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்துவரும் பிரேமா என்பவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கிறார்.
50 ஆயிரம் ரூபாயில் முதல் தவணையாக 25 ஆயிரம் ரூபாயை பிரேமா வாங்கும் போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்களால் பிரேமா கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சமூகநலத்துறை அலுவலகத்தில் மற்ற அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 128

0

0