ஊதியம் வழங்க கோரி களப்பணியாளர்கள் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம்

Author: kavin kumar
10 August 2021, 3:59 pm
Quick Share

நீலகிரி: உதகை அருகே நகராட்சி உட்பட்ட பகுதிகளில் கொரோனோ காலகட்டத்தில் பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு இதுநாள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை என உதகை நகராட்சி அலுவலகத்தில் வாகனங்களை சிறைபிடித்து நுழைவு வாயிலை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் கொரோனோ கால கட்டத்தில் கள பணிக்காக 250க்கும் மேற்பட்டோர் பணி அமர்த்தப்பட்டனர். நாள்தோறும் உதகையில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் ஒவ்வொரு வீடாக சென்று பணியாற்றி வந்தனர். இரு மாதமாக பணி செய்ததற்கு இது வரை சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க படவில்லை எனவும்,

மேலும் பணி செய்ததற்கான ஒருநாள் தொகையாக முதலில் 640 என கூறி பணியமர்த்த பட்டதாகவும் தற்போது இதுவரை சம்பளத் தொகை தரவில்லை என்பதால் களப்பணியாளர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பணியாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி நுழைவு வாயிலை திறந்த பின் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் வெளியே சென்றன இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 119

0

0