கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய களப்பணியாளர்கள்: கவுரவித்த மதர் தெரசா அறக்கட்டளை

Author: Udayaraman
20 June 2021, 7:54 pm
Quick Share

தஞ்சை: தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் மற்றும் மாநகராட்சிசார்பில் தஞ்சையை அடுத்த சாந்தி வனம் இடுகாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏராளமான சடலங்களை கொண்டுவந்து எரியூட்டிய களப்பணியாளர்கள் கவுரவிக்கப்பட்னர்.

தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மதர் தெரசா அறக்கட்டளை தலைவர் சவுரிமுத்து மற்றும் அறங்காவலர்கள் சம்பத்து ராகவன் கோவிந்தராஜ் ஆகியோர் தஞ்சையை அடுத்த சாந்தி வனம் தகன மேடையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தொற்றால் இறந்தவர்களை எரியூட்டும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு அவர்களின் மதிப்புடைய உடல்நலம் காக்கும் பாதுகாப்பு கவசங்கள், கையுறைகள், சானிடைசர்கள்,

சிறப்பு முக கவசங்கள், பாதாம், முந்திரி, உலர் திராட்சை, உலர்நெல்லி பழவகைகள், பருப்பு வகைகள், விட்டமின் மாத்திரைகள் என இதுவரை இல்லாத வகையில் முதல் முன்களப் பணியாளர்களான இவர்களுக்கு வழங்கப்பட்டது. உயிரையும் பொருட்படுத்தாது சேவை செய்த மயான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகராட்சி மாநகராட்சி கண்காணிப்பாளர் கிளமண்ட், மதர் தெரசா பவுண்டேஷன் இயக்குனர் ரதீஷ் குமார், தளவாட மேலாளர் ஜெரோம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Views: - 119

0

0