இலவசமாக பிரியாணி வழங்கிய உணவக உரிமையாளர் மீது வழக்கு பதிவு

Author: kavin kumar
9 August 2021, 6:33 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் இலவசமாக பிரியாணி வழங்கிய உணவக உரிமையாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று தனியார் உணவகம் ஒன்று திறப்பு விழா சலுகையாக வெள்ளை வேஷ்டி அணிந்து வருபவர்களுக்கு ஒரு பிரியாணியும் வெள்ளை வேஷ்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து வந்தால் இரண்டு பிரியாணியும் திமுக கரை வேஷ்டி அணிந்து வந்தால் மூன்று பிரியாணியும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பிரியாணி பிரியர்கள் தனியார் உணவகத்தை நோக்கி படையெடுத்தனர்.

சமூக இடைவெளி இல்லாமல் முகக்கவசம் இல்லாமலும் பிரியாணி வாங்குவதற்காக கூடிய மக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த தனியார் உணவக உரிமையாளர் மீது கரோனா பரப்புதல், தனிமனித இடைவெளியின்றி கூட்டத்தைக் கூட்டுதல், கரோனா பரவல் தடைச் சட்டம், முக்கவசம் அணியாமல் இருத்தல் என 4 பிரிவுகளின் அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Views: - 213

1

0