குமரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

20 January 2021, 1:57 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முறை திருத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் வரையறுக்கப்பட்ட மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக இறுதி வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 82 ஆயிரத்து 936 பேர். பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 84 ஆயிரத்து 488 பேர் உள்ளனர். 203 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்களாக உள்ளனர்.

Views: - 0

0

0