தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

20 January 2021, 1:24 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 14,81,799 பேர் மொத்த வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,24,484 நபர்களும், பெண் வாக்காளர்கள் 7,57,151 நபர்களும், மூன்றாம் பாலினத்தோர் 164 பேர்களும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2,84,164 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Views: - 3

0

0