காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

Author: kavin kumar
28 August 2021, 8:53 pm
Quick Share

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக காணாமல் போன செல்போன்களில் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 106 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் எஸ்பி ஸ்ரீநாதா ஒப்படைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2019 முதல் தற்போது 2021 வரை 500 செல்போன்கள் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையங்களில் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் டிஎஸ்பி உமாசங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக காணாமல் போன செல்போன்கள் புகார்கள் குறித்தும் அந்த செல்போன்களை தற்போது யார் பயன்படுத்துகின்றனறா என்று சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை செய்து வந்தனர். இதில் விலை உயர்ந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 106 போன்கள் தனிப்படை போலிசாரால் மீட்கப்பட்டன.

இதில் பெரும்பாலும் ஹான்ராய்டு செல்போன்களே அதிகம். இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உரியவர்களிடம் செல்போனை ஒப்படைத்தார். அப்பொழுது பேசிய எஸ்.பி ஸ்ரீ நாதா காணாமல் போன போன்களில் சில போன்கள் வெளிமாநிலத்தில் கூட பயன்படுத்தி பட்டு வந்தன அவர்களிடம் தொடர்பு கொண்டு வழக்கு உள்ளதால் போனை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தலின் பேரில், அவர்களும் செல்போனைகளை கொரியர் மூலம் அனுப்பி வைத்ததாகவும் எஸ்பி தெரிவித்தார். கடந்த ஒருமாதமாக செல்போன்களை மீட்க சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாரை எஸ்பி ஸ்ரீநாதா பாராட்டினார்.

Views: - 133

0

0