கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை

4 March 2021, 1:53 pm
Quick Share

திருவண்ணாமலை: செங்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் சுமார் 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இன்று அதிகாலை தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் தவறி விழுந்துள்ளது. பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் செங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் சுமார் 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானை கிணற்றிலிருந்து உயிருடன் பத்திரமாக மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தண்ணீரில் தவறி விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Views: - 15

0

0