கோவையில் வணிக வளாகத்தில் தீவிபத்து: பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு..!!

Author: Aarthi Sivakumar
3 August 2021, 8:45 am
Quick Share

கோவை: ரங்கே கவுண்டர் வீதியில் நள்ளிரவில் நான்கு மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கோவை ரங்கே கவுண்டர் வீதியில் இயங்குகின்ற நான்கு மாடி வணிக வளாகத்தில் சலீம் விபாரிக்கு சொந்தமான பிளாஸ்டிக் விற்பனை நிலையம் இருக்கின்றன. இந்த கடையில் இரவு திடீரென தீப்பிடித்து நச்சு புகை வெளிவந்தன. இதனை தீயணைப்பு வீரர்கள் அறிந்து இரண்டு வாகனத்தில் வந்து தீயை அனைக்க முற்பட்டன.

தீயை அணைக்க 30 தீயனைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம் வரும் முன்னரே பிளாடிக் பொருட்கள் தீயில் சாம்பலாக ஆரம்பித்தன. பொருட்கள் தீயில் சாம்பலான நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பப்பட்டது. 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் சாம்பலான நிலையில் கடை வீதி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 87

0

0