காற்றாலை இறக்கை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இறக்கை எரிந்து சேதம்

13 July 2021, 4:55 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் காற்றாலை இறக்கை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இறக்கை எரிந்து சேதமடைந்தது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வினோ மெக்கானிக் என்கின்ற தனியார் காற்றாலை இறக்கைகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து பல்வேறு காற்றாலை உற்பத்தி நிறுவனங்களுக்கு காற்றாலை இறக்கைகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில், உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட திடீர் வெப்ப மாறுபாடு காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் தீயை உடனடியாக வந்து அணைத்தனர். தீ விபத்து குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு காற்றாலை இறக்கை மட்டும் லேசாக சேதமானதாகவும், தீ பரவாமல் தீயணைப்பு துறையினர் உடனடியாக அணைத்ததால் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட இறக்கைகளுக்கு தீ பரவாமல் பெரும் சேதம் தடுக்கப்பட்டது.

Views: - 39

0

0