ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ விபத்து: 4 லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

14 July 2021, 3:29 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில்ஊதுபத்திதொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடி குமரப்ப நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கிருஷ்டியான்பேட்டை தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே ஊதுபத்தி தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஊதுபத்தி கம்பெனி ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. கடந்த வாரம் மீண்டும் இங்கு உற்பத்தி தொடங்கப்பட்டது. நேற்று இரவு வழக்கம் போல பணி முடிந்து ஊதுபத்தி கம்பெனியை மூடி விட்டு சென்றனர். இன்று காலை திடீரென ஊதுபத்தி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பொருட்கள் எரிய தொடங்கியது. ஊதுபத்தி கம்பெனியிலிருந்து புகைமண்டலம் எழுந்தது. இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர்(பொறுப்பு) முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து மளமளவென பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஊதுபத்தி தயாரிக்க பயன்படும் குச்சிகள்,மாவு மூட்டை உள்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 251

0

0