விசைத்தறி கூடத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து: 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது

15 September 2020, 11:14 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அருகே விசைத்தறி கூடத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அருகே உள்ள காவேரி சாலையில் நாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் இயக்கி வருகிறது. இதில் தமிழக அரசின் சார்பில் நூல்கள் வாங்கி இலவச வேட்டிகள் மற்றும் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று மாலை வேலையாட்கள் முருகன் என்பவர் வழக்கம்போல விசைத்தறியை இயக்கி வந்துள்ளார்.

அப்போது விசைத்தறி கூடத்தில் இருந்த மின்விளக்கு வெடித்து மின்கசிவு ஏற்பட்டு தீ பற்ற தொடங்கியது. தீ மளமளவென வேகமாக பரவி விசைத்தறி கூடம் முற்றிலும் தீ பரவியது.சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இதில் 5 லட்சம் மதிப்பிலான 14 விசைத்தறி, வேஷ்டி,சேலை மற்றும் நூல்கள் தீயில் கருகியது.

Views: - 7

0

0