பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒரு தொழிலாளர் படுகாயம்

4 November 2020, 10:41 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இறவார்பட்டியில் சிவகாசியை சேர்ந்த பாலாஜி பவன் என்பவருக்குச் சொந்தமான அணில் பயர் ஒர்க்ஸ் எனும் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இது நாக்பூர் லைசென்ஸ்ன் கீழ் செயல்படுகிறது. இந்த தொழிற் சாலையில் 80க்கு மேற்பட்ட அறைகள் உள்ளது. இந்த பட்டாசு ஆவையில் சக்கரம் சரவெடி உள்ளிட்ட பட்டாசு ரகங்களை தயார் செய்து வருகின்றனர். இந்த ஆலையில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் உலர வைத்திருந்த கருந்திரியை வெட்டும் பொழுது கருந்திரியில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் இருந்த இறவார்பட்டியைச் சேர்ந்த வேல்சாமி என்பவரது மகன் ஊர்தேவன் (42) என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ஊர்தேவனுக்கு சிவகாசி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 13

0

0