கிருஷ்ணகிரியில் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை வழங்கல்

15 May 2021, 5:32 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 லட்சத்தி 16 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு கொரோனா நிவராணமாக ₹ 2 ஆயிரம் முதல்கட்ட தொகையை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது இதனால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு குடும்ப அட்டை கார்களுக்கு நிவராண தொகையாக 4000 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணையாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைகளுக்கு நிவராண வழங்கப்படுகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்தி 16 ஆயிரத்தி 729 குடும்ப அட்டைகளுக்கு முதல் கட்ட கொரோனா நிவராணமாக 1058 நியாயவிலைக்கடை மூலமாக குடும்ப அட்டைக்கு ரூபாய் 2000 வீதம் மொத்தம் 103 கோடி 34 லட்சம் வழங்கப்படுகிறது.

இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எமக்கல்நத்தம்,மல்லபாடி, கிருஷ்ணகிரி நகரம் கந்திப்குப்பம், உள்ளளிட்ட பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக்கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் நிவராண தொகையை வழங்கி துவங்கி வைத்தனர்.மேலும் கொரோனா தொற்று பரவலை அடுத்து டேக்கன் முறையில் தனிமனித இடைவெளி பின்பற்றி நிவராண தொகை வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி திமுக மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Views: - 39

0

0