கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு:மீனவர்களிடம் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை

Author: kavin kumar
12 October 2021, 7:58 pm
Quick Share

நாகப்பட்டினம்: கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததையடுத்து அவரது உடல் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் கொண்டுவரப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த அர்பின் என்பவருக்கு சொந்தமான அன்பு மாத என்ற விசைப்படகில் குமரி மாவட்டம் தூத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 4 மீனவர்கள் கேரளாவை சேர்ந்த ஒருவர் வட இந்தியர்கள் 3 பேர் மற்றும் நாகபட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இருவர் என மொத்தம் 11 பேர் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த 4 ம் தேதி ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 ம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது நாகபட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் என்ற மீனவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு கடலில் தவறி விழுந்துள்ளார். உடனே சக மீனவர்கள் கடலுக்குள் குதித்து தினேஷை மீட்டு படகிற்க்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மீனவர்கள் தினேஷின் உடலை கரைக்கு கொண்டு வர திரும்பி உள்ளனர். 4 நாட்களுக்கு பின் இன்று தினேஷின் உடல் தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுக்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் துறைமுகத்திற்கு வந்து விசாரணை நடத்தி தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தினேஷுடன் படகில் இருந்த மீனவர்களிடம் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 196

0

0