அலையின் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் மாயம்

3 February 2021, 5:50 pm
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காடு முகத்துவாரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் அலையின் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்து மாயமானதையடுத்து உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் படகில் மீன்பிடிக்கச் சென்ற சென்னை அயோத்திகுப்பம்
மணிமாறன், வைரவன் குப்பம் ராஜா, ராஜேந்திரன், ரமேஷ் ஆகியோர் கடல் அலையின் சீற்றத்தில் படகில் இருந்து தூக்கி வீசப்பட்டு கடலில் தத்தளித்தனர். அருகில் இருந்த மீனவர்கள் உதவியால் ராஜா, ராஜேந்திரன்
, ரமேஷ் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். ஆனால் மணிமாறன் மட்டும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கடற்கரை மற்றும் முகத்துவாரம் பகுதியில் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்புத்துறை வீரர்கள் மீனவர்கள் மாயமான மணிமாறன் உடலை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அலையின் சீற்றம் காரணமாக மீனவர் கடலில் மூழ்கி மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 18

0

0