மீன்பிடி சட்டத்தை மீறும் மீனவர்களை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

15 July 2021, 8:56 pm
Quick Share

நாகப்பட்டினம்: கடலோர மீன்பிடி சட்டத்தை மீறும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாகை நம்பியார் நகர் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.

கடலோர மீன்பிடி சட்டத்தை மீறும் மீனவர்களை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் மீனவர் கிராமத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கடலோர மீன்பிடி சட்டத்தை மீறும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை மற்றும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள

நாகை நம்பியார்நகர் மீனவர்கள், விசைப்படகுகள் கரையோரங்களில் இழுவலைகளை பயன்படுத்தி மீன் குஞ்சுகளை அடியோடு அழிப்பதால், இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். மேலும், நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்தை அதிகாரிகளை கண்டித்து அனுமதி வழங்கவில்லை என்றாலும், வருகின்ற  17 ஆம் தேதி முதல் நாகை அவுரி திடலில் தடையை மீறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

Views: - 73

0

0