சுருக்கு வலையை தடை செய்யக்கோரி படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் கடலில் போராட்டம்

Author: Udhayakumar Raman
23 July 2021, 4:28 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சுருக்கு வலையை முற்றிலுமாக தடை செய்யக்கோரி 100 க்கு மேற்பட்ட படகுகளில் கருப்பு கொடி ஏற்றி 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் சிலர் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதனிடையே சுருக்கு வலையை பயன்படுத்த மாநில தடை விதிக்க கோரி மீனவ பிரதிநிதிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர் ஆனால் இதுவரை தடை செய்யப்படாத நிலையில் இன்று 100 கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக தலைமை செயலகம் வரை வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநில அரசு சுருக்கு வலையை முற்றிலுமாக தடை செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர் மீனவர்களின் போராட்டம் காரணமாக கடற்கரை சாலையில் 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Views: - 348

0

0