வீடுகளிலேயே தங்கியுள்ள மீனவ மக்கள்: மீனவப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை

25 November 2020, 9:52 pm
Quick Share

திருவள்ளூர்: புயல் பாதுகாப்பு மையங்களுக்கு வர மீனவ மக்கள் மறுப்பு படகுகள் வலைகள் காற்றில் அடித்துச் செல்லப்படும் என்ற அச்சத்தில் கடற்கரையோரம் உள்ள வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

பழவேற்காடு, ஆண்டார்‌மடம், வஞ்சிவாக்கம், காட்டுப்பள்ளி, வைரங்குப்பம், மாங்கோடு, பள்ளிப்பாளையம் ஆகிய புயல் பாதுகாப்பு மையங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை இழந்தோர் வருவாய்த் துறையினர் மூலம் அழைத்து வரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரவு உணவு வழங்கப்பட்டு பெட்ஷீட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வரை குப்பம் மீனவ கிராமத்தில் இருந்து புயல் பாதுகாப்பு மையத்திற்கு வர மறுத்துள்ள கோரை குப்பம் மீனவ கிராம மக்களை அரசு பேருந்து மூலம் அழைத்து வர பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் மீனவப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Views: - 18

0

0