தேசிய மீன்வள கொள்கையை திரும்ப பெற கோரி மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…

8 September 2020, 3:28 pm
Quick Share

புதுச்சேரி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மீன்வள கொள்கையை திரும்ப பெற கோரி மீனவர் விடுதலை வேங்கை அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மீன்வள கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை திரும்ப பெற கோரி, புதுச்சேரி மீனவர் விடுதலை வேங்கை அமைப்பினர் மற்றும் மீனவர் பெண்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வீராம்பட்டினம் கடற்கரையில் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தொடர்ந்து மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு மீனவர்களுக்கு எதிரான புதிய கொள்கையை திரும்பபெறவிட்டால் அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி மத்திய அரசை கண்டித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Views: - 0

0

0