ஒற்றுமையை வளர்க்கும் மீன்பிடித் திருவிழா… ஆர்வத்துடன் மீன்பிடித்த மக்கள்!

Author: kavin kumar
8 August 2021, 3:57 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அடியனூத்து ஊராட்சி பகுதியில் உள்ளது பெருமாள் கோவில் பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சொந்த பந்தங்களை இணைக்கும் திருவிழா, மற்றும் அருகில் உள்ள மற்ற சுற்று வட்டார கிராமங்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் மீன் பிடி திருவிழா பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் இப்பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீர் நிறைந்தது,, தண்ணீர் குறைந்ததும் இன்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது, குளக்கரையில் அமைந்துள்ள கன்னிமர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய பின்னர் ஊர் நாட்டண்மை வெள்ளை துண்டை வீசி மீன் திருவிழாவை தொடக்கினார்,

அப்போது கரைகளில் வலைகளுடன் நின்று இருந்த அனைத்து தரப்பு வயது ஆண்கள், பெண்கள் தண்ணீருக்குள் இறங்கி மீன்களை வலை போட்டு பிடித்தனர், இந்த திருவிழாவில் நல்லாம்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, வாழைக்காய் பட்டி, கண்ணா பட்டி,வேடபட்டி உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்துகொண்டனர் குளத்தில் ,ஜிலேபி , கொறவை வகையான மீன்களை பிடித்தனர். மீன்பிடி திருவிழா இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 153

0

0