கோவையில் களைகட்டும் தேசியக்கொடி தயாரிக்கும் பணி

Author: Udayaraman
4 August 2021, 8:12 pm
Quick Share

கோவை: டவுன்ஹால் பகுதியில் தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. கோவிட் பரவலால் இந்த ஆண்டு தேசியக் கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் குறைந் துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் தேசியக் கொடிதயாரிப்புப் பணிகள் தீவிரமடைந் துள்ளன. உள்ள தனியார் கதர் விற்பனையகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி தயாரிப்புப் பணிகள் மேற்கொள் ளப்படுகின்றன.கதர், மைக்ரோ, வெல்வெட் ஆகிய துணிகளைக் கொண்டு ‘இன்ச்’ அளவில் குறைந்தபட்சம் 8-க்கு 10 அளவு முதல் அதிக பட்சம் 40-க்கு 72 வரை வெவ்வேறு அளவுகளில் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது. ‘அடி’ அளவில் குறைந்தபட்சம் 5-க்கு 12 என்ற அளவுமுதல் அதிகபட்சம் 15-க்கு 30 என்ற அளவு வரையும் தேசியக்கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. கதர்துணி தேசியக் கொடிகள் ரூ. 5 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், மைக்ரோ துணி தேசியக் கொடிகள் ரூ.30 முதல் ரூ.1,500 வரையும், வெல்வெட் துணி தேசியக் கொடிகள் ரூ.80 முதல்ரூ.2 ஆயிரம் வரைக்கும் விற்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் நெருங்கும் நாட்களில் கோவையில் மூலம் சராசரியாக 1.50 லட்சம் முதல் 2 லட்சம் தேசியக் கொடிகள் தயாரித்து விற்கப்படும். ஆனால், கோவிட் பரவலால் தேசியக்கொடி தயாரிப்பு, விற்பனை சரிவடைந்துள்ளதாக கொடி தயாரிப்பாளர்கள் தெரிவித் துள்ளனர்.தேசியக்கொடி தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள விற்பனையாளர்கள் கூறுகையில் ஆண்டுதோறும் சுதந்திரதினம், குடியரசு தினம் நெருங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே தேசியக்கொடி தயாரிப்பு, விற்பனை களைகட்டிவிடும். கோவையின் சுற்றுப்புற மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றில் இருந்தும் ஆர்டர்கள் வரும். வாடிக்கையாளர்கள் தேடிவந்து வாங்கிச் செல்வர்.

பள்ளிகள்,கல்லூரிகள், சங்க அலுவலகங்கள், கிளப்புகள் போன்றவற்றில் இருந்து வந்து மொத்தமாக வாங்கிச் செல்வர். நாங்கள் மொத்தமாக துணியைவாங்கி, இருகூர், அரசூர், மேட்டுப்பாளையம், குறிச்சி, போத்தனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தையல்கலைஞர்களுக்கு பிரித்து அனுப்பி, வெவ்வேறு அளவுகளில் தைத்து வாங்குவோம். எங்களது தயாரிப்புக் கூடத்தில் வைத்து 1 முதல் 42 இன்ச் வரை கொடியின் அளவுக்கு ஏற்ப அசோக சக்கரத்தை அச்சடித்து, இதர பணிகளையும் முடித்து விற்பனைக்கு அனுப்பு வோம். கதர் துணியினால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிக்கு வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும்.கோவிட் வைரஸ் பரவல்காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தேசியக்கொடி தயாரிப்பும், விற்பனையும் சரிவடைந்துள்ளது.

கடந்த சுதந்திர தினத்தன்று 50 ஆயிரம் கொடிகளே விற்பனையாகின. நடப்பாண்டும் பரவல் நீடிப்பதால் விற்பனை எப்படிஇருக்கும் எனத் தெரியவில்லை. 12 ஆயிரம் கொடிக்கே தற்போதுஆர்டர் வந்துள்ளது. நாங்கள் 50 ஆயிரம் கொடிகள் தயாரித்து இருப்பில் வைத்துள்ளோம். கேரளாவில் தொற்று தீவிரமடைந்துள்ளதால் அங்கிருந்தும் ஆர்டர் எவ்வாறு இருக்கும் எனத்தெரியவில்லை. நடப்பாண்டு 75-ம் ஆண்டு சுதந்திர தினம் என்பதால், ஒரு லட்சம் கொடிகளுக்காவது ஆர்டர் வரும் என எதிர்பார்க்கிறோம்’’என்று தெரிவிக்கன்றனர். தேசிய கொடிக்கும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 86

0

0