நாகர்கோயிலில் கொடி பேரணி அணிவகுப்பு.!எஸ்.பி பத்ரிநாராயணன் பங்கேற்றார்

30 November 2020, 2:11 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் நடக்கும் கொலை,கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்

தமிழகம் முழுவதும் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதில் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் இன்று காலை கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் இருந்து துவங்கியது. இந்த அணிவகுப்பை குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்றசம்பங்கள் நடந்த வண்ணம் உள்ளன.கஞ்சா, கொள்ளை ,கொலை, என நாளுக்குநாள் குற்றசம்பங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.அதனை தடுக்கும் வகையிலும்,பொது மக்களுக்கு காவல் துறையின் மீது உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலும், குற்றச்சம்பங்களில் ஈடுபடுவர்களை எச்சரிக்கை செய்யும் வகையிலும் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். பின்னர் இந்த அணிவகுப்பு மணிமேடை சந்திப்பு, செட்டிகுளம், வேப்பமூடுசந்திப்பு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.

Views: - 0

0

0