தரைப்பாலத்தின் மேலேயே கரைபுரண்டு ஓடும் வெள்ளம்:வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி

Author: Udhayakumar Raman
30 November 2021, 6:23 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வெள்ள நீர் செல்லும் தரைபால சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், மாம்பாக்கம் பகுதியில் வெள்ள நீர் செல்லும் தரை பால சாலையி கடக்க முயன்ற ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாம்சுந்தர் /21 இளைஞர் இருசக்கர வாகனத்தோடு நீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேர்வாய் கண்டிகை தீயணைப்புத் துறை மீட்புப்படையினர் மற்றும் பெரியபாளையம் காவல்துறையினர் கிராம இளைஞர்களின் உதவியோடு நீரில் மூழ்கிய சாம்சுந்தரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்ட நிலையில் அவரது உடலை தொடர்ந்து தேடி வருகின்றனர்.நேற்று இதே பகுதியில் வெள்ள நீரில் சாலையை கடக்க நடந்து சென்ற பெண் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட போதுஉடனடியாகஅங்குள்ள இளைஞர்கள் காப்பாற்றிய நிலையில் இன்று தனியார் நிறுவன ஊழியர் வெள்ள நீரில் இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 88

0

0