பாமக வேட்பாளருக்கு மலர்தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

27 March 2021, 1:23 pm
Quick Share

திருவள்ளூர்: கும்முடிபூண்டி பாமக வேட்பாளர் விஎம் பிரகாஷ் வீதி வீதியாக சென்று மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வழிநெடுகிலும் மாலை அணிவித்து மலர்தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் விஎம் பிரகாஷ் காயாலார் மேடு, நாகராஜ் கண்டிகை, பெரியஓபுலாபுரம், சின்னஓபுலாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவரை வழி நெடுகிலும் மலர் தூவி மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாகமாக பொதுமக்கள் வரவேற்றனர். கட்சித் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் ஆங்காங்கே பட்டாசு வெடித்து அனைத்து வீதிகளிலும் வரவேற்று அழைத்துச் சென்றனர் இதில் கூட்டணிக் கட்சிகளான பாஜக ஒன்றிய தலைவர் ஜம்புலிங்கம், அதிமுக எளாவூர் முல்லைவேந்தன்,
தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் சேகர், கும்முடிபூண்டி ஒன்றிய குழுதலைவர் சிவகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

Views: - 7

0

0