திருக்கோவிலூரில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு!!

Author: kavin kumar
9 August 2021, 8:56 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறையினரிடம், நகரிலுள்ள நான்குக்கும் மேற்பட்ட உணவாக உரிமையாளர்கள் தங்களது உணவக சான்றிதழ்களை புதுப்பிக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுகந்திரன் தலைமையிலான அலுவலர்கள் உணவகங்களில் போதிய வசதிகள் இருக்கின்றனவா, சமையல் கூடங்கள் சுத்தமாக பராமரிக்கப் படுகின்றனவா என்றும்,

சமையலர்கள் மற்றும் உணவு பரிமாறும் நபர்கள் உரிய தலை உறைகள் அணிந்திருக்கின்றனரா என்றும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோன்று கீழையூர் பகுதியில் செயல்பட்டுவரும் இந்து அறநிலைத் துறைக்கு சொந்தமான வீரட்டானேஸ்வரர் கோவில் ஆலயத்தில் பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் பயத்திலும் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, உணவு தயாரிக்கும் இடங்களில் இருந்த குறைகளை 15 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர்.

Views: - 134

0

0