மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை: கெட்டுப்போன மீன் 300 கிலோ உட்பட 650 கிலோ மீன்கள் அழிப்பு

Author: kavin kumar
27 August 2021, 1:54 pm
Quick Share

திருச்சி: திருச்சி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், கெட்டுப்போன மீன் 300 கிலோ உட்பட 650 கிலோ மீன்கள் அழிக்கப்பட்டது.

திருச்சி உறையூர் அடுத்துள்ள லிங்கா நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை
மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் திருச்சி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் ஷர்மிளா, உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பார்மலின் தடவிய 350 கிலோ மீன்களும், கெட்டுப்போன மீன்கள் 300 கிலோவும், 650 கிலோ மீன்களும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.இதுகுறித்து பாதுகாப்புத்துறை அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் மொத்தம் மற்றும் சில்லறை மீன் விற்பனையாளர்கள் பார்மலின் தடவியோ அல்லது கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் இனி வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். மேலும், பொதுமக்களுக்கு இதுபோன்ற கெட்டுப்போன மீன்களை அல்லது பார்மலின் தடவிய மீன்களை கண்டறியப்பட்டால் 9944959595 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

Views: - 186

0

0