பவானிசாகர் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பு : லாவகமாக மீட்ட வனத்துறையினர்!!

14 September 2020, 7:24 pm
Python Rescue - updatenews360
Quick Share

ஈரோடு : பவானிசாகர் அணை பூங்காவில் பதுங்கியிருந்த சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்காவில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்ட பூங்கா ஊழியர் ஒருவர் பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பவானிசாகர் அணை பூங்காவினுள் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் உள்ள பொந்து ஒன்றில் பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Views: - 8

0

0