தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது

6 September 2020, 1:27 pm
crime_arrest_updatenews360
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி லக்ஷ்மேந்திரா பிஸ்வாஸ் என்பவர் வங்கியில் இருந்து 9 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அவருடைய இரு சக்கர வாகனத்தில் தொழிற்சாலைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கத்தியை காட்டி வழிமறித்து ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் நாகராஜன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் 4 தனிப்படை அமைத்து கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் காவல் ஆய்வாளர் சக்திவேல் பெரியபாளையம் காவல் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து சிவப்பு நிற பல்சர் பைக் என உறுதி செய்தனர். இதனை வைத்து பல்சர் பைக்குகளின் எண்ணை வைத்து விசாரித்ததில், ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் பகுதியில் இருசக்கர வாகனம் இருந்ததை கண்டறிந்து, அதன்மூலம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஜெகன், மணிகண்டன், நாகலாபுரத்தைச் சேர்ந்த சலீம் பாஷா, ஒடிசாவை மாலிக் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார்,

அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள், வழிப்பறியின் போது பயன்படுத்திய பட்டாக்கத்தி, 5 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம், தங்க நகைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான ஜெகன் ஏற்கனவே கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மூவர் கொலை வழக்கில் ஜாமினில் உள்ளவர் என்பதும், அதே போன்று செல்போன் கடையில் கத்தியை காட்டி தகராறில் ஈடுபட்டார் என்றும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 11

0

0