பெட்ரோல் பங்க் ஊழியரை கொலை வழக்கு: குற்றவாளிகள் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

21 November 2020, 9:24 pm
Quick Share

புதுச்சேரி: வீட்டு அருகே மது அருந்தியததை தட்டி கேட்டதால் பெட்ரோல் பங்க் ஊழியரை கொலை செய்ததாக அவ்வழக்கில் கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்

புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்பிரகாஷ் @ பிரகாஷ். இவர் தன் பணி பிரியும் பெட்ரோல் பங்கில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தி சென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலிசார் வழக்கு பதிவு செய்து வில்லியனூர் பகுதியில் பதுங்கி இருந்த சன்முகாபுரம் பகுதியை சேர்ந்த சபரி, டெம்போ கார்த்தி, மரத்தான் மற்றும் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி எலி கார்த்தி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கைதான சபரி, டெம்போ ராஜா, மரத்தான் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு அய்யங்குட்டிபாளையத்தில் உள்ள பிரகாஷ் விட்டு அருகே மது அருந்தி கொண்டிருந்த போது பிரகாஷ் தங்களை அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு கூறியதாகவும், இவர்கள் அங்கிருந்து செல்லததால் பிரகாஷ் தங்களை தாக்கியதால், பிரகாஷ் மீது இருந்த அத்திரத்தால் தங்கள் நண்பனும் ரவுடியுமான எலி கார்த்தியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி தங்களை தாக்கிய பிரகாஷை பழி வாங்க வேண்டும் என கொலை தீட்டம் திட்டி,

அவரை பெட்ரோல் பங்கில் இருந்து கடத்தி சென்று அருகே இருந்த குட்டையில் அவரின் தலையை முக்கி கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புகொண்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ரவுடி உட்பட மூன்று பேரையும் மேட்டுபாளையம் போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0