உக்ரைனில் திருச்சியை சேர்ந்த நான்கு மாணவர்கள் சிக்கியுள்ளனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்…

Author: kavin kumar
26 February 2022, 8:09 pm
Quick Share

திருச்சி : உக்ரைன் நாட்டில் திருச்சியை சேர்ந்த நான்கு மாணவர்கள் சிக்கியுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

திருச்சி சர்க்யூட் ஹவுஸ் காலனி வளாகப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு அலுவலர்களுக்கான இந்த குடியிருப்பில் ஏற்கனவே 480 வீடுகள் இருந்தது. அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இடித்து விட்டு தற்போது 464 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வருடம் டிசம்பரில் முழுமையாக பணிகள் நிறைவு பெறும்,

குடியிருப்பில் பாதுகாப்புகான கட்டமைப்புகளும் சிறப்பான முறையில் ஏற்பாடுசெய்யப்படும், உக்ரைன் நாட்டில் தங்கி இருக்கும் திருச்சியை சேர்ந்த நான்கு மாணவர்களின் விவரங்கள் நேற்று இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரகளை பாதுகாப்பாக அழைத்து வர வழி வகை செய்து வருகின்றனர். 4 பேருமே பாதுகாப்பாக இருக்கின்றனர். அரிஸ்டோ மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்குவதற்கு அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் பணிகளை துவக்க திட்டம் உள்ளது என தெரிவித்தார்.

Views: - 672

0

0