அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி:2 பேர் கைது
Author: kavin kumar7 November 2021, 4:28 pm
வேலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவான அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த பெருவளையம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன். வேலூரை சேர்ந்த ஓய்வு பெற காவல்துறை பிகிலர் தங்கராஜ், ராணிப்பேட்டை மாவட்டம் தட்டச்சபாறையை சேர்ந்த சதீஷ் ஆகியோர் வேலூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம் காவல்துறையில் பிகிலர் வனத்துறையில் வனவர் , நீதிமன்றங்களில் கிளார் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம் தலா 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை என மொத்தம் சுமார் 5 கோடி வரை பணம் வசூலித்த தோடு போலி பணி நியமான ஆணை வழங்கி உள்ளனர். இந்நிலையில், பணி நியமன ஆணைக்கான தேதி முடிந்தும் பணி வழங்கப்படாததால் சந்தேகமடைத்த ஏமாற்றப்பட்டவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் பணத்தை தராததாலும், மிரட்டல் தொனியில் பேசியதாலும் மூவர் மீதும் தங்கள் பணத்தை மோசடி செய்ததாக வேலூர் விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த யுவனாதன் மற்றும் அவருடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட 25 பேர் கடந்த வாரம் வேலூர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்நிலையில், வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறையினர் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட தங்கராஜ் மற்றும் சதீஷ் ஆகியோரை வேலூர் மாவட்ட குற்றபிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் தலைமறைவாகிய நிலையில் அவரையும் தேடி வருகின்றனர்.
0
0