நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் மோசடி: தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிதி நிறுவன இயக்குனர்கள்

Author: Udayaraman
5 August 2021, 7:55 pm
Quick Share

கோவை: கோவையில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய விட்டு தலைமறைவாக உள்ள 2 பேரை தேடப்படும் குற்றவாளியாக கோவை டன்பிட் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறத்துள்ளது.

கோவையில் இயங்கிவந்த கிரீன் லைஃப் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான கோவை புதூரை சேர்ந்த அஸ்மத்கான் கோரி, திருநகர். திருச்சியைச் சேர்ந்த அம்ஜத்கான் கோரி, உறையூர் சாலை ரோடு திருச்சி சையது முகமது ரபி, என்பவர்கள் பொதுமக்களை ஏமாற்றி 44 பேரிடம் முதலீடுட்டு தொகையை பெற்று முதலீட்டு பணத்திற்கு ஒவ்வொரு மாதமும் இரட்டிப்பு பணமாக தருவதாக ஆசை வார்த்தை கூறி 82 இலட்சத்து 85,000 டெபாசிட்டாக பெற்றுக் கொண்டும் பின்னர் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து மேற்படி வழக்கானது கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளிகள் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தன. இதைதொடர்ந்து அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் தொடர்ந்து அவர்கள் தலைமறைவாகி உள்ளதால் தேடப்படும் குற்றவாளியாக கோவை டன்பிட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்களால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Views: - 137

0

0