32வது சாலை பாதுகாப்பு வார விழா : ஓட்டுநர் உரிமம் பெற வந்தோருக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

29 January 2021, 4:46 pm
Quick Share

நீலகிரி: 32வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி உதகையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற வந்தோருக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து கழகம் சார்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து உதகையில் இரண்டு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதையடுத்து இன்று உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் ஓட்டுநர் உரிமம் பெற வந்த நூற்றுக்கணக்கானோருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் கிட்டப்பார்வை தூரப்பார்வை என அனைவருக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஆய்வாளர் குலோத்துங்கன், உதகை நகர டிஎஸ்பி மகேஸ்வரன், போக்குவரத்து ஆய்வாளர் அப்துல் கலாம், உட்பட ரெட் கிராஸ் நிர்வாகிகள் போக்குவரத்து காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Views: - 15

0

0