அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம் !!

15 August 2020, 10:55 pm
Quick Share

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்டத் தியாகி மத்திய, மாநில அரசுகள் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தில் வசித்து வரும் நாராயண சுவாமி (98) சுதந்திரப் போராட்ட தியாகி இவர் இன்று அவரது வீட்டில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று ஒரு நாள் தனக்கு எந்த ஒரு அடிப்படை வசதி மற்றும் நலத்திட்ட உதவிகள் எதுவும் செய்யவில்லை எனக் கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு தனக்கு இரண்டாம் நிலை வீடு மற்றும் மத்திய அரசு மூலம் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் தங்களது பேரன் மார்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறுகையில், “நான் ஆகஸ்ட் மாதம் 1943இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றேன். தற்போது எனக்கு 98 வயது ஆன நிலையில் 2005 ஆண்டிலிருந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறேன். இதுவரை எந்த பயனும் இல்லை.
தியாகிகளுக்கு வழங்கும் இலவச நிலம் 5 ஏக்கர் கொடுக்க வேண்டும் என இதுவரை வைத்த கோரிக்கைகள் எதுவும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. எனவே இதன் காரணங்களாக இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

Views: - 32

0

0