பழமுதிர் கடையில் தீ விபத்து: அரைமணி நேரமாக போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
9 September 2020, 5:26 pmஈரோடு: மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த பழமுதிர் கடையில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இதில் இருசக்கர உதிரிபாகங்கள் விற்பனையகம், பழமுதிர், மருந்துகம் ,ஆவின்,காலணி, உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் உள்ளன.இந்நிலையில் சிந்து ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான டே2டே என்ற பழமுதிர் கடை சுமார் 8 ஆண்டுகளாக பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பூட்டப்பட்டிருந்த கடை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுத்தம் செய்துள்ளனர்.இந்நிலையில் இன்று மதியம் பூட்டியிருந்த பழமுதிர் கடையில் இருந்து புகை வருவதை கண்ட பக்கத்து கடைக்காரர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0