காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய லயன்ஸ் கிளப் ஆஃப் சூலூர் நிர்வாகிகள்…!!
Author: Babu Lakshmanan2 October 2021, 1:42 pm
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு லயன்ஸ் கிளப் ஆஃப் சூலூர் நிர்வாகிகள் சார்பில் மரச்செடிகள் மற்றும் நாற்றுகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
அக்.,2ம் தேதியான இன்று காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது தியாகத்தையும், செயல்களையும் நினைவுகூர்ந்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் வாழ்த்துக்களை கூறி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை புறநகர் பகுதியான சூலூரில் லயன்ஸ் கிளப் ஆஃப் சூலூர் சார்பில் பொதுமக்களுக்கு மரச்செடிகள் மற்றும் நாற்றுகள் வழங்கப்பட்டன.
கத்தரிக்காய் மற்றும் தக்காளி 6000 நாற்றுகளும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், செடிகள் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள் இளைஞர்கள் என அனைவரும் ஆர்வமுடன் பங்குபெற்று மரங்களை வாங்கிச் சென்றனர். வாகனங்களில் செல்பவர்களும் தங்களின் வாகனங்களை நிறுத்தி செடிகளை வாங்கிச் சென்றனர். மேலும், 100க்கும் மேற்பட்ட மரங்களும் புதிதாக வைக்கப்பட்டது.
லயன்ஸ் கிளப் ஆப் சூலூர் ஏர்விங் தலைவர் Ln.S. வினோத்குமார் மற்றும் லயன் ஏ.கே. ஜான்சன் ஆகியோர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், 324 C மாவட்ட ஆளுநர் நடராஜன், சூலூர் சட்டமன்ற உறுப்பினரின் மகன் வழக்கறிஞர் பிரபு ராம் கந்தசாமி, உலக உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து, சூலூர் ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு,* AIRFORCE அதிகாரி AIR COMMENDOR ஶ்ரீ குமார், CTMA தலைவர் சோமன் மேத்யூ, WMF தலைவர் ராஜன் மேனன், ஒன்றிய கவுன்சிலர் நவமணி ராமசாமி மற்றும் லயன்ஸ் ஏர்விங்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
1
0