காந்தி மார்க்கெட்டை திறந்து உள்ளே செல்ல முயன்ற இந்து தேசிய கட்சி நிறுவனத் தலைவர்

26 September 2020, 9:33 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பூட்டியிருக்கும் காந்தி மார்க்கெட்டை திறந்து உள்ளே செல்ல இந்து தேசிய கட்சி நிறுவனத் தலைவர் முயற்சி செய்ததை அறிந்து வியாபாரிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான காய்கறி சந்தைகள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து திருச்சி காந்தி மார்கெட் மூடப்பட்டது. அங்கு இருந்து சிறு வியாபாரிகள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கடை நடத்த அனுமதி அளித்தனர். மேலும், மொத்த வியாபாரிகள் பொன்மலையில் உள்ள ஜி கார்னர் பகுதியில் இரவு வேளையில் வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் காந்தி மார்க்கெட் திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை இந்து தேசிய கட்சியின் நிறுவன தலைவர் மணியன் மற்றும் கட்சியினர் காந்தி மார்க்கெட் திறக்க போராடி வரும் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று திருச்சி வந்தார். அப்போது காந்தி மார்கெட் உள்ளே சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும் என அங்கு பாதுகாப்பு நின்ற காவல் துறையினரிடம் கூறினார். ஆனால் காவல்துறையினர் மறுக்கவே அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி மார்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் கமலக்கண்ணன் மற்றும் வியாபாரிகள் அப்பகுதியை வந்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த காந்திமார்கெட் காவல் நிலைய காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் 25க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அவர்களோட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காந்தி மார்க்கெட் நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவதால் தங்களால் திறக்க முடியாது அதற்கான அனுமதியை வழங்க முடியாது என காவல்துறை தெரிவித்தனர். மேலும் காந்தி மார்க்கெட் திறப்பது தொடர்பான வழக்கு மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற வருவதால் அனுமதிக்க முடியாது கண்டிப்புடன் தெரிவித்தனர்.

அதன் பிறகு மணியன் வரும் 28ஆம் தேதி காந்தி மார்க்கெட் திறக்கப்படவில்லை என்றால் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன், மூடப்பட்டிருக்கும் காந்தி மார்க்கெட் உள்ளே தீவிபத்து ஏற்பட்டு பல இழப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே உடனடியாக திறக்க வேண்டும் என நாங்கள் பல முறை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்.

ஆனால் அக்டோபர் 13-ம் தேதி காந்தி மார்க்கெட் திறப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வர உள்ளது. அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் காந்தி மார்கெட்டை திறக்கப்பட வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

Views: - 7

0

0