விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் : கோவையில் அன்னதானம் வழங்கிய பாஜகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2021, 8:20 pm
Vinayagar - Updatenews360
Quick Share

ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் விநாயகர் சதுர்த்தி விழா கலையிழந்தது.

இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுவெளியில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட தமிழக அரசு தடை விதித்தது. மேலும் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து நீர்நிலைகளில் கரைக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் விநாயகர் ஆலயங்களில் இந்து முன்னணியினர் வழக்கம் போல உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் 15 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பாஜக சார்பாக நடைபெற்றது. இதில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி வேலாண்டிபாளையம் மண்டல பொதுச் செயலாளர் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழாவில் மாவட்ட செயலாளர் பூவை தங்கம், வடவள்ளி மண்டல பொதுச் செயலாளர் பிரதாப், கணபதி மண்டல் பொதுச் செயலாளர் விஜயன், வேலாண்டிபாளையம் மண்டல இளைஞரணி தலைவர் கார்த்திக், கணபதி மண்டல இளைஞரணி செயலாளர் ஆனந்த் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 171

0

0