தொழில் அதிபர்களிடம் கொள்ளை அடிக்க பதுங்கி இருந்த கும்பல்: சுற்றிவளைத்த போலீஸ்!

20 November 2020, 8:01 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அகரம் பகுதியில் இரவு நேரத்தில் மிளகாய் பொடி தூவி தொழில் அதிபர்களிடம் கொள்ளை அடிக்க பதுங்கி இருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்..

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள அகரம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவம் நடைபெறுவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து வில்லியனூர் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேக படும்படியாக சிலர் சுற்றி திரிவதை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அகரம் பகுதியை சேர்ந்த கவுதம், அரவிந்தன், மணிபாலன், விஷ்வா, சூர்யா, பாபு, கடலூரை சேர்ந்த மதன், சரத்குமார், வெங்கட் என்பதும்,

இவர்கள் அப்பகுதியில் பதுங்கியிருந்து அவ்வழியாக செல்லும் தொழிலதிபர்கள் மீது மிளகாய்பொடி தூவி கொள்ளை அடிப்பதும், மேலும் பல தொழில் அதிபரிடம் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டி இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலிசார் அவர்களிடம் இருந்த மிளகாய் பொடி , ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Views: - 0

0

0