கியாஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோவையில் ஆர்ப்பாட்டம்!!

Author: Babu Lakshmanan
30 August 2021, 6:24 pm
cbe protest - updatenews360
Quick Share

கோவை: சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை போல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள், திராவிட தமிழர் கட்சி, சி.பி.ஐ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தோர் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 139

0

0