மாபெரும் எருது விடும் விழா: சீறிப் பாய்ந்த எருதுகளை விரட்டி, பரிசுகளை தட்டி சென்ற இளைஞர்கள்

27 January 2021, 7:17 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருக உள்ள கும்மனூர் கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் எருது விடும் விழாவில் சீறிப் பாய்ந்த எருதுகளை விரட்டி, பரிசுகளை தட்டி சென்ற இளைஞர்கள்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூனர் கிராமத்தில், பொங்கல் பண்டியை முன்னிட்டு 5-ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில் நடைபெற்ற இந்த எருது விடும் விழாவில் கும்மனூர், கிருஷ்ணகிரி, ஜூனூர், வேப்பனஹள்ளி, ராயக்கோட்டை,  சின்னார், மேலுமலை என பல்வேறு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்துக்கொண்டன. அனைத்து எருதுகளுக்கும், கால்நடை மருத்துவர்கள் மூலம் தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு, விழாவில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

பின்னர் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்ட எருதுகள் மக்களின் கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்து சென்றது, இதனை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் விரட்டி சென்றனர்.குறிப்பிட்ட தூரத்தை, குறைத்த மணித்துளிகளில் கடந்த எருதுகளின் உரிமையாளர்களுக்கு, முறையே ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயம், பிரோ, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கும்மனூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Views: - 0

0

0