எண்ணத்தை வண்ணமாக்கும் ஓவியருக்கு பரிசு

Author: kavin kumar
22 August 2021, 6:56 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர் ஹரிஹரன் தனது எண்ணத்தை மாற்றி ஓவியமாகத் தீட்டுவதால் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஹரிகரன் கொரானாக் காலத்தில் 100க்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். மனதில் தோன்றும் சிறிய பொறியையும் கொரோனா சிந்தனையாக்கி வண்ணமாக உருவாக்கி தருவதில், இவருக்கு நிகர் இவரே தான். இதனால் இவரை திண்டுக்கல் ரவிவர்மா என்று அழைக்கும் அளவுக்கு இவர் தனது திறமையை பறைசாற்றி வருகிறார்.இவரது ஓவியங்கள் இணையத்தில் பரவி பலரின் கண்ணைக் கவர்ந்து வருகிறது. இவரின் ஓவியத் திறமையைப் பாராட்டி, தன்னாா்வலர் பால் தாமஸ், இந்த இளைஞரின் திறமைகளைப் பற்றி, தெற்கு காவல்நிலைய சாா்பு ஆய்வாளர் அபுதல்ஹாரிடம் எடுத்துக் கூறினாா்.

இதையடுத்து இளைஞர் ஹரிகரன் உடனடியாக நேரில் அழைத்து, திண்டுக்கல் நகர் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் கொரானா விழிப்புணர்வு தொடர்பான ஓவியம் வரைய வாய்ப்பு வழங்கப்பட்டது. துள்ளியமாக வல்லியமாக இவர் வரைந்த ஓவியங்களை பார்த்து போலீசார் பரவசமடைந்து பாராட்டினர். இளைஞருக்கு எஸ்.ஐ.அபுதல்ஹா, இளம் ஓவியர் விருது வழங்கி கௌரவித்தாா். மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்களைத் தெரிவித்தாா். இளைஞர்களின் தனித்திறமை ஊக்கப்படுத்திய காவல்துறையினரை தன்னாா்வலர் பால் தாமஸ் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தாா். தனது தனித்திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கி, உற்சாகப்படுத்திய காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர் பால் தாமஸ்க்கு ஓவியர் ஹரி நன்றி தெரிவித்தாா்.

Views: - 196

0

0