சுவர் இடிந்து விழுந்து சிறுமி படுகாயம்: சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதி

2 July 2021, 1:59 pm
Quick Share

காஞ்சிபுரம்: நேற்று பெய்த கனமழையின் காரணமாக நெசவாளர் வீட்டின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அனுப்பபட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை இருந்து மாலை வரை அதிக வெயில் காணப்பட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை அறிக்கை தகவல் தெரிவித்து இருந்தது.ந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. காஞ்சிபுரம் நகரிலும் மின்னல் இடியுடன் பலத்த கனமழை விட்டு விட்டு பெய்தது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சி எஸ் எம் தோப்பு தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டின் கழிவறை சுவர் மழையின் காரணமாக இன்று காலை இடிந்து விழுந்ததில் ஆறுமுகத்தின் நான்காம் வகுப்பு படிக்கும் மகள் கீர்த்தனா (வயது8) சிக்கி படுகாயமடைந்தார். கீர்த்தனாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

Views: - 36

0

0