சிறுமி பாலியல் துன்புறுத்துதல் செய்யப்பட்டு கொலை: குற்றவாளியை கடுமையாக தண்டிக்க கோரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் போராட்டம்

Author: Udhayakumar Raman
28 June 2021, 4:34 pm
Quick Share

புதுச்சேரி: சிறுமி பாலியல் துன்புறுத்துதல் செய்யப்பட்டு கேரளாவில் உயிரிழந்ததற்கு காரணமான குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மருத்துவமனையில் உயிரிழந்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமியை யாரோ பலமுறை பாலியல் துன்புறுத்துதல் செய்ததில், அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்த அவர் உயிர் உயிரிழந்ததாக கேரளா போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய கேரளா போலீசார் அந்த சிறுமி புதுச்சேரி மேட்டுபாளையம் பகுதி குரும்மாபாட்டையை சேர்ந்தவர் என்றும், அவரை வீட்டருகே இருந்த அருண் என்கின்ற வாலிபர் வலுகட்டாயமாக பல முறை பாலியல் துன்புறுத்துதலில் ஈடுப்படுத்தி உள்ளார் என்பதால் அந்த சிறுமி,

கேரளாவில் உள்ள தனது உறவினரின் இல்லத்திற்கு வந்து தங்கி அங்கு உடல் நிலை சரி இல்லாமல் இருந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்த அருணை கேரளா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கேரளா சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்ட வாலிபர் அருணுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், வாலிபரை காப்பற்ற முயற்சிக்கும் புதுச்சேரி பா.ஜ.க அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் இந்த சம்பவம் குறித்து புதுச்சேரியில் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்த மேட்டுப்பாளையம் காவல்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

அதே போல் இந்த விவகாரத்தில் தலையிடாத குழந்தைகள் நல ஆணையத்தை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் சுதேசி பஞ்சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலிசார் அவர்களை தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர், இதனால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Views: - 375

0

0