அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறாதது மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Author: Udayaraman
10 October 2020, 2:52 pm
Quick Share

ஈரோடு: அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறாதது மகிழ்ச்சியே என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூக்கநாயக்கன்பாளையத்தில் ஆதித்திராவிடர்கள் வசிக்கும் குக்கிராமங்களில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.75 கோடி மதிப்பீட்டில் சாலைக்கான பூமிபூஜை மற்றும் பெரியகொடிவேரி பேரூராட்சியில் சந்தை மேம்பாடு பணிக்கு 1.67 கோடி மதிப்பீட்டில் பூமிபூஜையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்திப்பின்போது,

பிரதமர் பாராட்டும் அளவிற்கு அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கட்டாய கல்வி திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். பிற மாநிலங்களில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, இது குறித்து அந்தந்த முதல்வர் மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறாதது குறித்து கேள்விக்கு மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Views: - 33

0

0