இரண்டாவது தலைநகராக மதுரை வந்தால் மகிழ்ச்சி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி…

19 August 2020, 6:16 pm
Quick Share

விருதுநகர்: இரண்டாவது தலைநகராக மதுரை வந்தால் மகிழ்ச்சி எனவும், திமுக விற்குள் மிகப் பெரிய பூகம்பம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த பூகம்பம் எந்த நேரத்திலும் வெடித்து சிதறி இரண்டாக பிளக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாதிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்த கொண்ட பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 2 வது தலைநகராக மதுரை அமைக்கப்பட்டால் அது வர பிரசாதமாக அமையும் எனவும், தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் பணி ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும், தமிழகத்தில் அதிமுகவிற்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அம்மா ஆட்சி மீண்டும் அமையும்.

திமுக வை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. திமுக விற்கு மக்கள் வாக்களிக்க யாரும் தயாராக இல்லை. குறை சொல்லியே பிழைப்பு நடத்துகின்ற கட்சி திமுக. திமுகவிற்குள் மிகப் பெரிய பூகம்பம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த பூகம்பம் எந்த நேரத்திலும் வெடித்து சிதறி இரண்டாக பிளக்கும். அதிமுக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து தற்போது தெளிந்த நீரோடையாக உள்ளது. அந்த நீரோடையில் யாரும் கலங்கம் கற்பிக்க முடியாது. 2021 ல் பாஜக தான் தலைமை தாங்கும் என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் தான் முடிவு எடுப்பார்கள்.

தலைமை இலக்கை காட்டி விட்டால் அம்பை தொடுத்து போர் தொடுப்பது மட்டுமே தங்களின் வேலை. என்றும் முதல்வர் எடப்பாடி என்ற கருத்தில் மாற்றம் உண்டா என்ற கேள்விக்கு,தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளது அதுகுறித்து தற்போது கருத்து சொல்ல இயலாது. பாஜக பின்னால் தான் அதிமுக இயங்குகிறது என்ற கேள்விக்கு, மத்திய அரசுக்கு பின்னால் தான் மாநில அரசு இயங்குகிறது ஆனால் தமிழகத்தில் அதிமுகவே முன்னால் உள்ளது. தமிழகத்தில் அதிமுகதான் ஆளும் அதை பார்த்து திமுக வாழும் என தெரிவித்தார்.

Views: - 27

0

0